டெல்டா மாவட்ட சாகுபடிக்காக ஆயிரத்து 700 டன் டிஏபி உரம் வருகை

டெல்டா மாவட்ட சாகுபடிக்காக ஆயிரத்து 700 டன் டிஏபி உரம் வருகை

ஒடிசா மாநிலத்தில் இருந்து ஆயிரத்து 700 மெ.டன் டிஏபி உரம் ரயில் மூலம் தஞ்சைக்கு வந்தது. 

ஒடிசா மாநிலத்தில் இருந்து ஆயிரத்து 700 மெ.டன் டிஏபி உரம் ரயில் மூலம் தஞ்சைக்கு வந்தது.

ஒடிசா மாநிலத்தில் இருந்து ஆயிரத்து 700 மெ.டன் டிஏபி உரம் ரயில் மூலம் தஞ்சைக்கு வந்தது.

தமிழத்தின் நெற்களங்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்குகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி நடைபெறும். தவிர வாழை, கரும்பு, வெற்றிலை, மக்காச்சோளம், நிலக்கடலை, எள், உளுந்து, மரவள்ளிக்கிழங்கு உள்ளிட் டவை சாகுபடி செய்யப்பட்டு வருகின் றன. தற்போது டெல்டா மாவட்டங்களில் ஆழ்துளை கிணறு மூலம் கோடை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதனால் சாகுபடிக்கு தேவையான விதைகள், உரம், இடுபொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி ஒடிசா மாநிலத்தில் இருந்து ஆயிரத்து 700 மெ.டன் டிஏபி உரம் 21 ரயில்வே வேகன்களில் தஞ்சைக்கு வந்தது.

தஞ்சை வந்த உர மூட்டைகள் பின்னர் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள தனியார் உர விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உர மூட்டைகள் இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட உள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story