காட்பாடிக்கு 1,300 டன் உரம் ரயில் மூலம் வருகை

காட்பாடிக்கு 1,300 டன் உரம் ரயில் மூலம் வருகை

உரம் வருகை

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து சரக்கு ரயில் மூலம் காட்பாடிக்கு 1,300 டன் யூரியா உரம் வந்தது.

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து சரக்கு ரயில் மூலம் காட்பாடிக்கு 1,300 டன் யூரியா உரம் வந்தது. இதில் வேலூர் மாவட்டத்திற்கு 100 டன், திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 100 டன், திருவள்ளூர் மாவட்டத்திற்கு 300 மெட்ரிக் டன், கிருஷ்ணகிரி, காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு தலா 200 டன், குடோனுக்கு 200 டன் என லாரிகள் மூலம் பிரித்து அனுப்பப்பட்டது. இதே போல டி.ஏ.பி மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் ஒடிசா மாநிலத்தில் இருந்து காட்பாடிக்கு சரக்கு ரயில் மூலம் வந்தது.

இதில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களுகக்கு தலா 50 டன், காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு 150 டன், திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 100 டன் என 400 டன் டி.ஏ.பி.,உரமும், காம்ப்ளக்ஸ் உரம் வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு தலா 50 டன், ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு 200 டன், திருவண்ணாமலை, காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு தலா 300 டன் என மொத்தம் 900 டன் காம்ப்ளக்ஸ் உரம் வந்தது.

இந்த உர மூட்டைகளை லாரிகள் மூலம் அந்தந்த மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பும் பணி நடந்து வருகிறது.

Tags

Next Story