திருப்பூரில் கலைச்சங்கம நிகழ்வுகள்

திருப்பூரில் கலைச்சங்கம நிகழ்வுகள்

கலை நிகழ்வுகள்

திருப்பூரில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் கலை பண்பாட்டு இயக்கம் சார்பில் தமிழர் திருநாள் பொங்கல் விழாவை கொண்டாடும் வகையில் கலைச்சங்கம நிகழ்வுகள் நடைபெற்றது.

திருப்பூரில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் கலை பண்பாட்டு இயக்கம் சார்பில் தமிழர் திருநாள் பொங்கல் விழாவைக் கொண்டாடும் வகையில் கலைச் சங்கம நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

திருப்பூரில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மற்றும் கலை பண்பாட்டு இயக்கம் சார்பில் தமிழர் திருநாள் பொங்கல் விழாவை கொண்டாடும் வகையில் கலைச் சங்கமம் நிகழ்வு ரயில் நிலையம் அருகில் உள்ள ராயபுரம் பகுதியில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அழிந்து வரும் பாரம்பரிய கலைகளான பறை இசை,நையாண்டி மேளம்,கரகாட்டம் என பல்வேறு நிகழ்ச்சிகளும் கிராமிய இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர். கிறிஸ்தவராஜ்,தெற்கு சட்டமன்ற உறுப்பினர். செல்வராஜ்,மாநகராட்சி மேயர்.தினேஷ்குமார், மாநகராட்சி துணை மேயர். பாலசுப்பிரமணியம், கலாராணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து கலை நிகழ்ச்சி நிகழ்த்திய கலைஞர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Tags

Next Story