பட்டுக்கோட்டையில் தமுஎகச கலை இலக்கிய இரவு
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் காசாங்குளம் வடகரையில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில், மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 95-ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, 43-ஆவது கலை இலக்கிய இரவு நடைபெற்றது. இதையொட்டி, காலை 10 மணிக்கு மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்தல், மாலை 6 மணிக்கு பேருந்து நிலையத்திலிருந்து கலை இலக்கிய பேரணி மற்றும் சமூக நீதி போராளிகள் சிலைகளுக்கு மாலை அணிவித்தல், இரவு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில், தமுஎகச மாநிலத் தலைவர் கவிஞர் மதுக்கூர் இராமலிங்கம், திரைக் கலைஞர் ரோகிணி, கவிஞர் நந்தலாலா, தமுஎகச மாநில பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா, எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன், கவிஞர் நாறும்பூ நாதன், முத்துநிலவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்வில், புதுகை பூபாளம் கலைக்குழு நிகழ்ச்சி, உரை வீச்சு, நேர்காணல், கதை சொல்லல, மக்கள் ஆட்டக் கலைகள், நாடகம், கவித்தூறல், நூல்அரங்கம், நூல் அறிமுகம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடை பெற்றன. ஏற்பாடுகளை பட்டுக்கோட்டை தமுஎகச கிளை நிர்வாகிகள் செய்தனர்.