காஞ்சி மாவட்ட அருங்காட்சியகத்தில் கலை பொருட்கள் பராமரிப்பு பயிற்சி

காஞ்சி மாவட்ட அருங்காட்சியகத்தில் கலை பொருட்கள் பராமரிப்பு பயிற்சி

பயிற்சி வகுப்பு 

சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தமிழ்த்துறை மாணவ- - மாணவியருக்கு, கலை பொருட்கள் பராமரிப்பு பயிற்சி வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில், சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தமிழ்த்துறை மாணவ- - மாணவியருக்கு, ஐந்து நாட்கள் நடைபெறும், கலை பொருட்கள் பராமரிப்பு பயிற்சி துவக்க விழா நேற்று நடந்தது. இதில், அருங்காட்சியகம் மற்றும் தொல்லியல் சார்ந்த கலை பொருட்கள் பராமரிப்பு பயிற்சிகளாக, கற்சிலைகள், உலோக சிலைகள், ஓலைச்சுவடி, அரியவகை பொருட்கள் பராமரிப்பு குறித்த பயிற்சி ஐந்து நாட்களுக்கு அளிக்கப்பட உள்ளது.

இதில், பல்வேறு தொல்லியல் வல்லுனர்கள் பங்கேற்று தொல்லியல் சார்ந்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர். முதல் நாளான நேற்று, கற்சிலைகள் பராமரிப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி முடிவில் களப்பயணம் மேற்கொள்ளப்பட்டு கோவில் கட்டுமானங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்படும் என, காஞ்சிபுரம் மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் உமாசங்கர் தெரிவித்தார்.

Tags

Next Story