ரிஷிவந்தியத்தில் அர்த்தநாரீஸ்வரர் கோவில் குளங்கள் பூமி பூஜை
ரிஷிவந்தியத்தில் பழமை வாய்ந்த முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் கோவில் குளங்கள் சீரமைக்க பூமி பூஜை நடந்தது.
ரிஷிவந்தியத்தில் பழமை வாய்ந்த முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இக்கோவிலுக்கு வெளியே தேவேந்திர தீர்த்த குளமும், பின்புறம் அகத்தியர் தீர்த்த குளமும் உள்ளது. இக்கோவிலில் சேதமடைந்த நிலையில் உள்ள சுவாமி சன்னதிகள் மற்றும் மேற்புற சுவாமி சிலைகளை சீரமைக்க ஏற்கனவே 66 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், கோவில் குளங்களையும் சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து 2 குளங்களையும் சீரமைக்க கூடுதலாக 30 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பூமிபூஜை நேற்று நடந்தது. கள்ளக்குறிச்சி தி.மு.க., தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், ஒன்றிய சேர்மன் வடிவுக்கரசி சாமிசுப்ரமணியன், மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் பாலாஜி பூபதி, மாவட்ட துணைச் செயலாளர் அண்ணாதுரை, மாவட்ட கவுன்சிலர் கோவிந்தராஜி, நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.