கலைஞர் நூற்றாண்டு முத்தமிழ்தேர் ஓசூர் வருகை..!

கலைஞர் நூற்றாண்டு முத்தமிழ்தேர் ஓசூர் வந்தடைந்தது.மாநகர மேயர் சத்யா வரவேற்றார்.

தமிழ்நாடு முழுவதும் வலம் வரும் கலைஞர் நூற்றாண்டு "முத்தமிழ்தேர்" இன்று ஓசூர் வந்தடைந்தது. மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பார்வையிட்டு மரியாதை செலுத்தினார்கள். முததமிழறிஞர் தலைவர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவர்கள் தமிழகத்திற்கு ஆற்றிய அரும் பணிகள்,

அவரது பரிமாணங்களை போற்றிடும் வகையில் அவர்களின் புகழுக்கு புகழ் சேர்க்கும் வகையில் இன்றைய இளம் தலைமுறையினருக்கு கலைஞர் கருணாநிதி அவர்களின் பன்முக தன்மையை எடுத்து கூறும் வகையிலும் எழுத்தாளர் கலைஞர் குழுவின் சார்பில் கலைஞர் அவர்களின் புகழ்பாடும் முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் பயணிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. அ

தனைடிப்படையில் இன்று கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், ஓசூர் பேருந்து நிலையம் அருகில் வருகை தந்த முத்தமிழ் தேரை மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம் எல் ஏ தலைமையில் திமுகவினர் மலர் தூவி வரவேற்றனர். அதனை தொடர்ந்து பேனா வடிவில் வடிவமைக்கப்பட்ட இந்த முத்தமிழ் தேரில் கலைஞரின் சிலை மற்றும் அவரது தாயார் அஞ்சுகத்தம்மாள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மேலும் கலைஞர் எழுதிய புத்தகங்கள், கலைஞரின் வாழ்க்கை வரலாற்றில் சித்தரிக்கும் புகைப்பட தொகுப்புகளும் தேரில் இடம் பெற்றுள்ளன. பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது இதனை ஏராளமான பொதுமக்கள், மாணவ, மாணவிகள் பார்வையிட்டு சென்றனர். மேலும் கலைஞர் மற்றும் பேனா உருவம் பொறித்த செல்பி கார்னர் முன்பு அரசு பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்து சென்றனர்.

வந்திருந்த அனைவருக்கும் மரக்கன்றுகள் , தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் ஓசூர் மாநகர மேயர் சத்யா, மாவட்ட பொருளாளர் சுகுமார், துணை மேயர் ஆனந்தையா, மாநகராட்சி ஆணையாளர் சினேகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story