தண்ணீரில் காந்தி மற்றும் பாரதியார் உருவங்களை வரைந்த கலைஞர்
தண்ணீரில் காந்தி மற்றும் பாரதியார் உருவங்களை வரைந்த கலைஞர்
கோவையில் தண்ணீரில் காந்தி மற்றும் பாரதியார் உருவங்களை படங்களை வரைந்து அசத்தியுள்ள இளைஞர்க்கு பாராட்டு.
கோவை:நாட்டின் 75 ஆவது குடியரசு தின விழா ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.அரசு சார்பில் இதற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த தங்க நகை பட்டறை தொழிலாளி UMT ராஜா நீரில் வண்ண கோலப்பொடி மற்றும் மாவை கொண்டு மகாத்மா காந்தி மற்றும் பாரதியாரின் படங்களை வரைந்து அசத்தியுள்ளார். வழக்கமாக இந்த பொடிகள் சிறிது நேரத்தில் நீரில் கரைந்துவிடும் என்பதால் அது கரைவதற்குள் இரண்டு ஓவியங்களையும் வரைந்துள்ளதே இதன் சிறப்பம்சம் எனவும் தேசத்தலைவர்கள் என்றும் நம் இதயத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக நீரில் தலைவர்களின் உருவத்தை வரைந்துள்ளதாக UMT ராஜா தெரிவித்துள்ளார்.
Next Story