நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் கலைஞர் பிறந்த நாள் கொண்டாட்டம்

நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் கலைஞர் பிறந்த நாள் கொண்டாட்டம்
நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் கலைஞர் பிறந்த நாள் கொண்டாடபட்டது.

நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 101 வது பிறந்த நாள் விழா நகர, ஒன்றிய, பேரூர்களில் நடைபெற்றது. ராசிபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஒன்றிய, நகர,

பேரூர்களில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிகளில் அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் கலந்து கொண்டு கழகக் கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கினார். திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி,

அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்திலின் படியும், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான கே.ஆா்.என்.இராஜேஸ்குமார் வழிகாட்டுதலின்படி முத்தமிழறிஞர் கலைஞர் 101 வது பிறந்த நாள் விழா நகர, ஒன்றிய, பேரூர்களில் நடைபெற்றது. அதன்படி, ராசிபுரம் நகரக் கழக சார்பில் ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகில் ராசிபுரம் நகரக் கழகச் செயலாளர் என்.ஆர்.சங்கர் தலைமையில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி கழக கொடியேற்றி, பொது மக்களுக்கு சர்க்கரை பொங்கல் மற்றும் இனிப்பு வழங்கினார்.

தொடர்ந்து மாவட்ட இளைஞரணி சார்பில் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் எம்.கார்த்திக் ஏற்பாட்டில் அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக பொறுப்பு பொருளாளர் ஏ.கே.பாலச்சந்திரன், ராசிபுரம் நகர மன்ற தலைவர் கவிதா சங்கர், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் சுதா ஜெயக்குமார், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் பி.ஜெயக்குமார்,

நகர்மன்ற உறுப்பினர்கள் கந்தசாமி, ஆனந்த், ரவிச்சந்திரன், கேசவன், நடராஜ், சண்முகம், செல்வம், பிரபு, நகர இளைஞரணி துணை அமைப்பாளர் பி.பாண்டி, வார்டு இளைஞரணி நிர்வாகிகள் கிஷோர், வினோத், சஞ்சய், தனுஷ், சிபி, லவன்குமார், சரவணன் கிரி தனபால் பிரசாந்த் வைசந்த், பரத் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர். தொடர்ந்து ராசிபுரம் ஒன்றிய கழகச் செயலாளரும், ஒன்றிய குழு தலைவருமான கே.பி.ஜெகநாதன், பிள்ளாநல்லூர் பேரூர் கழகச் செயலாளர் அ.சுப்பிரமணியம் தலைமையிலும், அத்தனூர் பேரூர் அண்ணா சிலை அருகில் பேரூர் கழக செயலாளர் கே.கண்ணன் தலைமையிலும், வெண்ணந்தூர் பேரூர் அலுவலகம் அருகே தங்க சாலை வீதியில் பேரூர் கழகச் செயலாளர் ஆர்.எஸ்.எஸ்.ராஜேஷ் தலைமையிலும்,

பட்டணம் பேரூர் மாரியம்மன் கோயில் பகுதியில் பேரூர் கழகச் செயலாளர் பொன்.நல்லதம்பி தலைமையிலும், புதுப்பட்டி பேரூர் பேருந்து நிலையம் அருகில் பேரூர் கழகச் செயலாளர் பி.ஜெயக்குமார் தலைமையிலும், கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, பொது மக்கள், தூய்மை பணியாளர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோருக்கு இனிப்புகள் வழங்கி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

Tags

Next Story