புனித அல்போன்சா கல்லூரியில் கலை இலக்கிய விழா 

புனித அல்போன்சா கல்லூரியில் கலை இலக்கிய விழா 

கல்லூரியில் கலை இலக்கிய விழா வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு அளிப்பு

புனித அல்போன்சா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கவின்கலை மன்றம் சார்பாக இரண்டு நாட்கள் "அல்கிரியேட்டிகா" கலை இலக்கிய விழா நடைபெற்றது.
குமரி மாவட்டம் கருங்கல் அருகேயுள்ள சூசைபுரம் புனித அல்போன்சா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கவின்கலை மன்றம் சார்பாக இரண்டு நாட்கள் "அல்கிரியேட்டிகா" கலை இலக்கிய விழா நடைபெற்றது. தக்கலை மறை மாவட்ட குருகுல முதல்வரும் கல்லூரி மேலாளருமான பேரருட்பணியாளர் தோமஸ் பவுத்துப்பறம்பில் விழாவைத் தொடங்கி வைத்தார். விழாவை முன்னிட்டு அரங்க போட்டிகள் அரங்கமல்லா போட்டிகள் என இரு பிரிவுகளாகப் போட்டிகள் நடைபெற்றன. இரண்டாவது நாள் நடைபெற்ற நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராகத் திரைப்பட பாடகரும் இசையமைப்பாளருமான சாம்சன் சில்வா கலந்து கொண்டு " இசை, பாடல், திரைப்படம் எனத் தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டதோடு சில பாடல்களையும் பாடி மாணவ மாணவிகளை மகிழ்ச்சிப் படுத்தினார். கலை இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குக் கல்லூரி தாளாளர் மற்றும் செயலர் அருட்பணியாளர் ஆன்றனி ஜோஸ், சிறப்பு விருந்தினர் சாம்சன் சில்வா, முதல்வர் அருட்பணியாளர் முனைவர் மைக்கேல் ஆரோக்கியசாமி எஸ்டிபி, கல்லூரி ஆன்மீக வழிகாட்டி அருட்பணியாளர் அஜின் ஜோஸ், துணை முதல்வர் முனைவர் ஆர். சிவனேசன் ஆகியோர் பரிசுகளை வழங்கி தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.

Tags

Next Story