விராலிமலை கோயிலில் ஆருத்ரா தரிசனம்
விராலிமலை கோயிலில் ஆருத்ரா தரிசனம்
விராலிமலை முருகன் கோயிலில் நடராஜருக்கு ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. இதில், நடராஜர், அம்பாள் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.விராலிமலை முருகன் மலைக் கோயிலில் சுவாமி முருகன் ஆறு முகங்களுடன் வள்ளி, தெய்வானை சமேதராக மயில் மேல் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். வருடம்தோறும் இக்கோயிலில் பல்வேறு விழாக்கள் வெகுவிமர்சையாக நடத்தப்படுவது வழக்கம். நிகழாண்டில் ஆருத்ரா தரிசன விழா கொண்டாடப்பட்டது.
இவ்விழாவை முன்னிட்டு மலைக்கோயில் மேல் இருந்து மாணிக்கவாசகர்புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து தெப்பக்குளக் கரையில் தீர்த்தவாரி நடைபெற்றது.தொடர்ந்து நடராஜர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்து தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. முன்னதாக நடராஜர், அம்பாள் விராலிமலை வீதிகளில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். தொடர்ந்து விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.