திருவாதிரையை முன்னிட்டு ஆருத்ரா தரிசனம்
சிறப்பு அபிஷேகம்
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கோவில்பட்டியில் அருள்மிகு கைலாசநாதர் சமேத செண்பகவல்லி திருக்கோவிலில் திருவாதிரையை முன்னிட்டு நடந்த சிறப்பு அபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கோவில்பட்டியில் அருள்மிகு கைலாசநாதர் சமேத செண்பகவல்லி திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனம் மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு நடராஜருக்கு பால்,இளநீர், சந்தனம், ஜவ்வாது, மஞ்சள்,தேன், திருமஞ்சனம், வில்வம்,போன்ற 21 வகை அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து வில்வம், மல்லிகை, ரோஜா, முல்லை, அரளி, செம்பருத்தி, செவ்வரளி, தாமரை, கனகாம்பரம், சாமந்திப்பூ, செவ்வந்திப்பூ,தாழம்பூ, வாடாமல்லி,ஜாதிமல்லி, மலர்கள் கொண்ட சிறப்பு அலங்காரம், அபிஷேகம், பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது.
Next Story