ஆருத்ரா தரிசன திருவீதி உலா

குமாரபாளையத்தில் ஆருத்ரா தரிசன திருவீதி உலா நடந்தது
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ஆருத்ரா தரிசன திருவீதி உலா நடந்தது. ஆருத்ரா தரிசன நாளான நேற்று அனைத்து சிவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. குமாரபாளையம் அக்ரஹாரம் காசி விசாலாட்சி உடனமர் காசி விஸ்வேஸ்வரர் ஆலயத்தில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடத்தப்பட்டன. ஆருத்ரா தரிசன நாளையொட்டி சுவாமிகளின் திருவீதி உலா நடந்தது. கோவில் வளாகத்தில் துவங்கிய திருவீதி உலா, புத்தர் வீதி, சேலம் சாலை, தம்மண்ணன் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளின் வழியாக சென்று மீண்டும் கோவிலில் நிறைவு பெற்றது. பக்தர்கள் சுவாமி திருவீதி வரும் பாதையில் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து, வழிநெடுக காத்திருந்து தேங்காய், பழங்கள் உள்ளிட்ட பூஜை சாமான்கள் கொடுத்து தீபாராதனை காட்டப்பட்டது. கோட்டைமேடு கைலாசநாதர் கோவில், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை உடனமர் மகேஸ்வரர் கோவில், அங்காளம்மன் கோவில் சவுண்டம்மன் கோவில்கள், கள்ளிபாளையம் சிவன் கோவில், தேவூர் ஆத்மலிங்கேஸ்வரர் கோவில், உள்ளிட்ட பல கோவில்களில் சுவாமிக்கும், நந்தி பகவானுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story