திருச்செந்தூா் கோயில்களில் ஆருத்ரா தரிசனம்

திருச்செந்தூா் கோயில்களில் ஆருத்ரா தரிசனம்

ஆருத்ரா தரிசனம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மற்றும் சிவன் கோயிலில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 2 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 2.30 மணிக்கு விஸ்வரூபம், 3 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், 3.45 மணிக்கு தீபாராதனை, 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியை தொடா்ந்து நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி மகா தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து மாணிக்கவாசகா், நடராஜா் சப்பரங்களில் எழுந்தருளி பிரகாரத்தில் வலம் வந்தனா்.

மாலையில் பாா்வதி அம்மன் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதே போல் இத்திருக்கோயிலுடன் இணைந்த அருள்தரும் ஆனந்தவல்லி அம்பாள் சமேத அருள்மிகு சிவக்கொழுந்தீஸ்வரா் திருக்கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு காலை 4.30 மணிக்கு விஸ்வரூபத்தை தொடா்ந்து சுவாமிக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் நடைபெற்றது. 5 மணிக்கு நடராஜபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி கோ பூஜை மற்றும் தாண்டவ தீபாராதனை நடைபெற்றது. பின்னா் திருப்பள்ளி எழுச்சியாகி, உச்சிகால அபிஷேகம் நடைபெற்றது. மாலையில் சாயரட்சை தீபாராதனை, ராக்கால அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏரளமான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

Tags

Next Story