புதிய கட்டிடத்தில் ரேஷன் கடை திறந்த அருள் எம்எல்ஏ !

புதிய கட்டிடத்தில் ரேஷன் கடை திறந்த அருள் எம்எல்ஏ !

ரேஷன் கடை

சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முத்துநாயக்கன்பட்டி ஊராட்சியில் பாழடைந்த பழைய கட்டிடத்தில் செயல்பட்டு வந்த ரேஷன் கடைக்கு ரூ.12.67 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இந்த ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது. இந்த ரேஷன் கடையை அருள் எம்.எல்.ஏ. திறந்து வைத்து பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முத்துநாயக்கன்பட்டி ஊராட்சியில் பாழடைந்த பழைய கட்டிடத்தில் செயல்பட்டு வந்த ரேஷன் கடைக்கு ரூ.12.67 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இந்த ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது. இந்த ரேஷன் கடையை அருள் எம்.எல்.ஏ. திறந்து வைத்து பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். தொடர்ந்து நைனாத்தாள் ஏரி பகுதியில் சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.11.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அவர் திறந்து வைத்தார். மேலும் மரத்துக்குட்டை கிராமத்தில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியையும் அருள் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முத்துநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ராஜா, மாவட்ட துணைச்செயலாளர் தங்கராஜ், ஒன்றிய செயலாளர் காமராஜ், துணைத்தலைவர் சத்தி, வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story