அருள்மிகு பிரசன்னா நஞ்சுண்டேஸ்வரர் சித்திரை தேர் திருவிழா

எடப்பாடியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில் சித்திரைத் திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி பஸ் நிலையம் பின்புறம் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் அருள்மிகு தேவகிரி அம்மன் சித்திரை திருத்தேர் திருவிழா கடந்த 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை திருத்தேரோட்டம் இன்று மாலை 5 மணியளவில் நடைபெற்றது இதில் திமுக சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் டிஎம். செல்வகணபதி கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து துவங்கி வைத்தார் தேரோட்டத்தில் ஸ்ரீ விநாயகர், அருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் அருள்மிகு தேவகிரி அம்மன், முருகன், வள்ளி,தெய்வானை, பல்லக்கில் எடுத்துவரப்பட்டு அலங்கரிக்கப்பட்ட தனித்தனி மூன்று தேர்களில் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது தொடர்ந்து முக்கிய வீதி வழியாக வளம் வந்ததன. இதில் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர். இத்தேர் திருவிழாவை காண ஏராளமான பொதுமக்கள் அப்பகுதியில் குவிந்தனர்.

Tags

Next Story