அருள்மிகு ஸ்ரீ கம்ப்பெருமாள் திருகல்யாண தெப்பத்தேர்விழா

ஆத்தூர் முட்டல் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கம்ப்பெருமாள் திருகல்யாண வைபோகம் தெப்பத்தேர்விழா நடைபெற்றது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள முட்டல் மலை கிராமத்தில் கம்ப பெருமாள் திருக்கோவில் உள்ளது சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த திருக்கோவிலில் ஆண்டு தோறும் சித்ரா பௌர்ணமி அன்று தெப்ப தேரோட்டம் நடைபெறுவது வழக்கம், அதை தொடர்ந்து இந்த ஆண்டு அருள்மிகு ஸ்ரீ கம்ப பெருமாள் கோவிலில் தெப்ப தேரோட்டம் நடைபெற்றது, தேரோட்டத்திற்காக கடந்த 16 ந் தேதி கொடியேற்றதல், காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி கழுகு மரம் ஏறுதல்,ஸ்ரீ கம்பப்பெருமாளுக்கு பொங்கல் வைத்து மாவிளக்கு திருக்கோடி வைத்தல் தினசரி பெருமாள் மற்றும் தாயார் சன்னதிக்கு சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்று வந்த நிலையில் இன்று சித்ரா பௌர்ணமி முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ கம்ப பெருமாள் சாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அங்குள்ள முட்டல் ஏரிக்கு பக்தர்களால் பல்லக்கில் உற்சவர் சுவாமியை எடுத்து வரப்பட்டது, அதை தொடர்ந்து ஏரியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தெப்பத்தேரில் கம்பபெருமாள் சுவாமி வைக்கப்பட்டு பக்தர்களால் தெப்ப தேரோட்டம் விழா வெகுவிமர்சியாக நடைபெற்றது, மேலும் இந்த நிகழ்ச்சிகள் முட்டல் மலை கிராம மக்கள் மட்டுமின்றி கல்லாநத்தம், துலுக்கனூர் அம்மம்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தெப்ப தேர் திருவிழாவை கண்டு மகிழ்ந்து அருள்மிகு ஸ்ரீ கம்ப பெருமானை தரிசித்தனர்.

Tags

Next Story