அருமனை காவல் நிலையத்தை நிதி நிறுவன வாடிக்கையாளர்கள் முற்றுகை

அருமனை காவல் நிலையத்தை நிதி நிறுவன வாடிக்கையாளர்கள் முற்றுகை

காவல் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்

தனியார் நிதி நிறுவனத்தில் பணம், நகை அடகு வைத்து ஏமாந்தவர்கள் அருமனை காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை சந்திப்பு அருகே தனியாா் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் ஏராளமானோா் வைப்பு நிதி மற்றும் நகை அடகு வைத்திருந்தனா். இந்நிலையில் கடந்த நவம்பா் மாதம் இந்த நிதி நிறுவனம் பூட்டப்பட்டது.

இதனால் பொதுமக்கள் சந்தேகம் அடைந்து காவல்துறைக்கு புகாா் தெரிவித்தனா். அதைத்தொடா்ந்து மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இதைத் தொடா்ந்து வாடிக்கையாளா்களுக்கு வைப்பு நிதி மற்றும் அடகு நகைகள் திருப்பிக் கொடுக்கப்படும் என நிறுவனம் சாா்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் 4 மாதங்கள் கடந்த பின்னரும் வாடிக்கையாளா்களின் நகைகளை திருப்பிக் கொடுக்காததால் திடீரென வாடிக்கையாளா்கள் கடந்த 4 ம் தேதி திங்கள்கிழமை நிதி நிறுவனத்தின் முன்பு திரளாக கூடினா்.

தகவலறிந்த அருமனை போலீஸாா் அங்கு வந்து நடத்திய பேச்சுவாா்த்தையில் 10 தினங்களுக்குள் வாடிக்கையாளா்களின் பணம் மற்றும் நகை திரும்ப கிடைக்கும் என்று கூறப்பட்டது. இதையடுத்து நிதி நிறுவனம் முன்பு திரண்ட வாடிக்கையாளா்கள் கலைந்து சென்றனா்.

இந்த நிலையில் சொன்ன நாளில் நகை,பணம் திரும்ப கிடைக்காததால் வாடிக்கையாளர்கள் அருமனை காவல் நிலையத்தை இன்று மதியம் முற்றுகையிட்டு தங்களுக்கு உடனடியாக நகைகளை வழங்க வேண்டும் என்று கூறியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story