புதுப்பொலிவு பெறும் அரும்புலியூர் ஏரிக்கரை

புதுப்பொலிவு பெறும் அரும்புலியூர் ஏரிக்கரை

அரும்புலியூர் ஏரிக்கரை

அரும்புலியூரில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டின் 1.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணி .
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம், அரும்புலியூரில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டின் கீழ், 400 ஏக்கர் பரப்பிலான ஏரி உள்ளது. இந்த ஏரிநீர் பாசனத்தை கொண்டு, அரும்புலியூர், காவணிப்பாக்கம், கரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 600 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் பாசனம் பெறுகின்றன. இந்த ஏரிக்கரை முழுக்க சீமை கருவேல மரங்கள் வளர்ந்து புதராக இருந்தது. இதனால், மாட்டு வண்டி, டிராக்டர் மற்றும் நெல் அறுவடை இயந்திரம் போன்ற வாகனங்களை விவசாயம் சார்ந்த பணிகளுக்கு ஏரிக்கரை மீது இயக்க முடியாத நிலை இருந்து வந்தது. இதனால், ஏரிக்கரை மீது உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். இதனிடையே, சில மாதங்களுக்கு முன், 'ஆர்ஆர்ஆர்' திட்டத்தின் கீழ், 1.90 கோடி ரூபாய் செலவில் அரும்புலியூர் ஏரிக்கரை பலப்படுத்தும் பணி நடந்தது. அப்போது, ஏரிக்கரைமீதுள்ள சீமை கருவேல மரங்கள் அகற்றம் செய்யப்பட்டன. இதனால், தற்போது அரும்புலியூர் ஏரிக்கரை முட்புதர்கள் அகற்றம் செய்து புதுப்பொலிவு பெற்று வருகிறது.

Tags

Next Story