அருணாசலேஸ்வரர் கோயில் தீபத்திருவிழா - அன்னதானம் வழங்க கட்டுப்பாடு

அருணாசலேஸ்வரர் கோயில் தீபத்திருவிழா - அன்னதானம் வழங்க  கட்டுப்பாடு

அன்னதானம் வழங்க கட்டுப்பாடு 

அருணாசலேஸ்வரர் திருக்கோயில் திபத்திருவிழாவின் போது அன்னதானம் வழங்க முன் அனுமதி பெறவேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் தீபத்திருவிழா வரும் 14ம் தேதி தொடங்கி 26 அன்று கொடியேற்றத்துடன் மகாதீப திருவிழா நடைபெறவுள்ளது திருவிழாவில் வெளிமாவட்டம், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து திருவிழாவை காண சுமார் 30 லட்சம் பக்தர்கள் கலந்துகொள்ளவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது தீபத்திருவிழாவின் போது அன்னதானம் வழங்க விரும்பும் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் www.fsces.go.im என்ற இணையதளத்தின் வாயிலாக பதிவு செய்து மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனுமதிக்கபட்ட் இடங்களில் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும். அன்னதானம் வழங்க விரும்புவோர் திருவண்ணாமலை செங்கம் சாலை, பழைய அரசு மருத்துவமனையில் இயங்கும் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் அலுவலகத்தில் 06.11.2023 முதல் 15.112023 தேதி வரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை அளித்து அனுமதி பெற வேண்டும். மேலும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் முகவரி தெரிவிக்கும் ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட சான்று நகல் ஆகிய விவரங்களை அளிக்க வேண்டும். அன்னதானம் வழங்கவோர்கள் தங்கள் சாாந்தவர்களின் விவரத்தினை ஆதார் அட்டை நகலுடன் சமர்பிக்க வேண்டும். எக்காரணத்தை கொண்டும் 26.11.2022 தேதிக்கு பின்னர் விண்ணப்பம் பெறப்பட மாட்டாது. அன்னதானம் அளிப்பவர்கள் அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே அன்னதானம் மட்டுமே அளிக்க வேண்டும். அனுமதி அளிக்கப்பட்ட நாள், நேரத்தில் மட்டுமே அன்னதானம் வழங்கப்பட வேண்டும். அனுமதி பெறாமல் அன்னதானம் வழங்க கூடாது. கிரிவலப்பாதையில் பக்கதர்களுக்கு இடையூறு இல்லாமல் கிரிவலப்பாதையிலிருந்து 100மீட்டர் உட்புறம் அன்னதானம் வழங்க வேண்டும். நோய்தொற்று உள்ளவர்களை அன்னதானம் சமைக்கவே மற்றும் வழங்கவோ அனுமதிக்ககூடாது. வாழை இலையில் மட்டுமே அன்னதானம் வழங்கவேண்டும் உணவு பொருட்கள் தரமானதாகவும், துய்மைதானதாகவும் மற்றும் கலப்படம் இல்லாமலும் இருக்க வேண்டும், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் தட்டுகளில் அன்னதானம் வழங்ககூடாது பிளாஸ்டிக் டம்பளர்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய கூடாது. உணவு கழிவு பொருட்களை போடுவதற்கு ஏதுவாக குப்பை தொட்டிகளை ஏற்பாடு செய்து அன்னதானம் அளிப்பவர்களே உணவு கழிவுகளை சேகரித்து அகற்ற வேண்டும். அன்னதானம் வழங்குமிடத்தை சுத்தம் செய்து விட்டு செல்ல வேண்டும். அனுமதி பெறாமல் அன்னதானம் வழங்கிட இயலாது. மேலும் போதிய வழிக்காட்டு முறைகளை பின்பற்றாதவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் விபரங்களுக்கு 044-237416, 9047748766, .9865689838 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

Tags

Next Story