அருப்புக்கோட்டை; தக்வா மதரஸாவில் ஆண்டு விழா
அருப்புக்கோட்டை காயிதே மில்லத் தெருவில் உள்ள தக்வா தவ்ஹீத் திடலில் தக்வா மதரஸாவின் 5 வது ஆண்டு விழா நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் தக்வா தவ்ஹீத் ஜமாத் செயலாளர் கமால் அகமது ஆரம்ப உரையாற்றினார். தலைவர் ஜஹாங்கீர் உசேன் வரவேற்புரை ஆற்றினார். மேலும் சிவகாசி சுல்தான் இப்ராஹிம் மார்க்க கல்வியின் அவசியம் குறித்து விளக்கி பேசினார்.
இந்த ஆண்டு விழா நிகழ்ச்சியில் மதரஸாவில் பயிலும் மழலை செல்வங்கள், தூங்கும் முன்னும், தூங்கி எழுந்த பின்னும் ஓதும் துவா, காலையிலும் மாலையிலும் ஓதும் துவாக்களை எப்படி ஓதுவது என்பது குறித்து துவா ஓதி மழழை மொழியில் விளக்கினர். மேலும் குர்ஆனில் உள்ள வசனங்களையும் கூறி அழகாக விளக்கினர். சிறப்பாக துவா ஓதி, புனித குர்ஆன் வசனங்களை சிறப்பாக கூறிய மழலை செல்வங்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இறுதியாக பொருளாளர் முஹம்மது இஸ்மாயில் நன்றி உரையாற்றினார். இந்த ஆண்டு விழா நிகழ்ச்சியில் மதரஸா நிர்வாகிகள், மாணவ, மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.