கோடை தொடங்கியுள்ளதால் பழுதான போர்வெல்களை சீரமைக்க வேண்டும்

X
மாநகராட்சி கவுன்சிலர்கள் கோரிக்கை
கோடை தொடங்கியுள்ளதால் பழுதான போர்வெல்களை சீரமைக்க வேண்டும் என மாநகராட்சி கவுன்சிலர்கள் கோரிக்கை
சேலம் மாநகராட்சியின் மாமன்ற இயல்பு கூட்டம் நடந்தது. மேயர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். துணை மேயர் சாரதாதேவி, கமிஷனர் பாலசந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளுக்கான கோரிக்கைகள் குறித்து பேசினர். திமுக கவுன்சிலர் குணசேகரன் பேசும் போது கோடை தொடங்கி உள்ளதால், பழுதடைந்துள்ள ஆழ்துளை கிணறு மோட்டார்களை சரி செய்ய வேண்டும். சரவணன்(திமுக): தனது வார்டில் கருங்கல்பட்டி காய்கறி மார்க்கெட் பகுதியில் சாக்கடை கால்வாய்,சாலையை அமைத்து தரவேண்டும். தெய்வலிங்கம்(திமுக): எனது வார்டில் அங்கன்வாடி கட்டிடங்களை கட்டிகொடுக்க வேண்டும். பற்றாக்குறையை போக்க சிறப்பு நிதியை கேட்டுபெறவேண்டும். மேயர் ராமச்சந்திரன் பேசும் போது மாநகராட்சியில் 20,30 ஆண்டுகளுக்கு மேலாக முடிக்கப்படாத பணிகளை தற்போது ரூ.66 கோடியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாநகராட்சியில் 2249 பணிகள் ரூ.242.66 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. என்றார். இதைதொடர்ந்து ஆளுங்கட்சி தலைவர் தமிழரசன் தீர்மானங்களை வாசித்தார்.இவை அனைத்தும் நிறைவேற்றப்பட்டன.
Next Story
