கோடைகால துவங்கிய நிலையில் தர்ப்பூசணி விற்பனை களைகட்ட துவங்கியது!
தர்பூசணி விற்பனை
கோடைகால தர்பூசணி விற்பனை துவங்கியது.
கோவை:கோடை காலம் துவங்க உள்ள நிலையில் இப்போது இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.இதனால் பொதுமக்கள் பலரும் உடலுக்கு குளிர்ச்சியூட்டும் உணவுகளை உட்கொள்ள துவங்கிவிட்டனர். கம்பங்கூழ், நீர்மோர், இளநீர்,பழச்சாறு ஆகியவற்றை அதிகளவு அருந்த துவங்கிய நிலையில் வெயில் காலத்தில் அதிகமானோர் விரும்பி சாப்பிடும் தர்பூசணி விற்பனை துவங்கி உள்ளது.இந்த பழத்தில் நீர் சத்துக்கள் அதிகம் உள்ளதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உட்கொள்வர். கோவையின் பல்வேறு இடங்களில் சாலையோரங்களில் தர்ப்பூசணி பழக்கடைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் பலரும் தர்பூசணி பழங்களையும் பழச்சாற்றையும் விரும்பி உட்கொள்கின்றனர்.வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க கூடும் என்பதால் இறக்குமதியை அதிகரிக்க வியாபாரிகள் முடிவெடுத்துள்ளனர்.
Next Story