சேவியர் தேவாலயத்தில் சாம்பல் புதன் திருப்பலி
ஆண்டுதோறும், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளுக்கு முன்பாக 40 நாட்கள் கிறிஸ்தவர்கள் தவமிருந்து வழிபாடு செய்து வருகின்றனர். இதனை கிறிஸ்தவர்கள் தவக்காலம் என கூறுவார்கள். இதன் அடிப்படையில், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி காவல் நிலையம் அருகில் அமைக்கப்பட்டுள்ள சேவியர் சர்ச்சில், பங்குத்தந்தை பிரான்சிஸ் தலைமையில் நேற்று மாலை "சாம்பல் புதன்" என அழைக்கப்படும், தவக்காலத்தின் துவக்க நாள் திருப்பலி நடைபெற்றது.
இந்த திருப்பலி நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி, சீத்தப்பட்டி, பள்ளப்பட்டி, வெங்கடாபுரம் பகுதியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பங்கு மக்கள் கலந்து கொண்டு தவக்காலத்தின் துவக்க நாள் நிகழ்வில் பங்கேற்று ஜெபம் செய்தனர். இந்த வழிபாட்டு நிகழ்ச்சியில், பங்குத்தந்தை பிரான்சிஸ், கிறிஸ்தவர்களுக்கு நெற்றியில் சிலுவை குறி வரைந்து ஆசீர்வதித்தார். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று சிலுவை பாதை நிகழ்ச்சியும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது