தேவகோட்டை அருகே அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா

தேவகோட்டை அருகே அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா

தேவகோட்டை அருகே பரியின்வயல் கிராமத்தில் ஸ்ரீ பெரியகருப்பு, ஸ்ரீ சின்னக்கருப்பர் ஆலய அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது


தேவகோட்டை அருகே பரியின்வயல் கிராமத்தில் ஸ்ரீ பெரியகருப்பு, ஸ்ரீ சின்னக்கருப்பர் ஆலய அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே பரியின்வயல் கிராமத்தில் ஸ்ரீ பெரியகருப்பு, ஸ்ரீ சின்னக்கருப்பர் ஆலய அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து வாஸ்து பூஜைகளுடன் முதல் கால யாக பூஜைகள் செய்து தீபாரதனை நடைபெற்றது.

பின்னர் இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் செய்து பூரணாகுதி மற்றும் தீபாரதனை செய்து யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு செய்து கோபுர கலசங்களுக்கு பூஜை செய்து, புனித நீரால் கும்பாபிஷேகம் செய்து பின்னர் முலவர் ஸ்ரீ பெரியகருப்பர் ஸ்ரீசின்ன கருப்பாருக்கும் மகா அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்து தீபாரதனை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கிராமத்தார்கள், கோவில் பங்காளிகள், இளைஞர் நற்பணி மன்றத்தினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி கும்பிட்டு வழிபட்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது

Tags

Next Story