சிவகாசி சிவன் கோவிலில் அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா
விருதுநகர் மாவட்டம், சிவகாசியின் பெருமைமிகு அடையாளமாக இருப்பது, பல நூற்றாண்டுகள் பழமையான 'சிவன் கோவில்'இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான,ஸ்ரீவிஸ்வநாதர் சுவாமி - ஸ்ரீவிசாலாட்சி அம்மன் எழுந்தருளியிருக்கும் இந்த பிரசித்தி பெற்ற கோவிலுக்கு மகா கும்பாபிஷேகம் நடத்துவதற்காக, கடந்த ஒரு வருடமாக புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன.
சீரமைப்பு மற்றும் புனரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், நாளை 26ம் தேதி (வெள்ளி கிழமை) மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்காக கடந்த 4 நாட்களாக கோவில் வளாகம் மற்றும் கோவில் முன்பு பிரமாண்டமான யாக சாலைகள் அமைக்கப்பட்டு,யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகின்றன.நாளை காலை,6ம் கால பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா நிகழ்ச்சிகள் தொடங்குகிறது.காலை 9.30 மணிக்கு மேல், ஸ்ரீவிஸ்வநாதர் சுவாமி - ஸ்ரீவிசாலாட்சி அம்மன் எழுந்தருளியுள்ள சந்நதி கோபுர விமானங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.அதனை தொடர்ந்து கோவிலில்,
உள்ள சந்நதி கோபுரங்கள்,நுழைவு வாயில் கோபுரங்கள் மற்றும் பரிவார தெய்வ சந்நதிகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. முன்னதாக, புனிதநீர் கலசங்கள் கோவில் வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சிவன் கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சிவகாசி நகர் முழுவதும் விழா கோலம் பூண்டுள்ளது.