ராமர் கோயில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்

குருவராஜபாளையம் கிராமத்தில் உள்ள பழமையான ராமர் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த குருவராஜாபாளையம் கிராமத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ ராமர் கோயிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. மேலும் கணபதி ஹோமம், மஹா சங்கல்பம் உள்ளிட்ட பூஜைகளுடன் மஹா யாகசாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் யாகசாலை பூஜைகளுக்காக 508 கலசங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்தது. இதனையடுத்து மஹா பூர்ணாஹுதி செய்யப்பட்ட பின்னர் யாகசாலையில் இருந்து கலச புறப்பாடு நடைபெற்றது. கோயிலை சுற்றி ஊர்வலமாக கொண்டுவரப்பட்ட கலசங்களை கோயில் உச்சியில் அமைக்கப்பட்டு இருந்த கோபுர கலச பகுதியிலும், மூலவர் அருகிலும் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் கோபுரத்தின் மீது அமைக்கப்பட்டு இருந்த விமான கலசத்தின் மீது பக்தர்களின் ஜெய் ஸ்ரீ ராம் முழக்கத்துடன் புனித நீர் ஊற்றப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டு மஹா கும்பாபிஷேகம் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

Tags

Read MoreRead Less
Next Story