தி.மலையில் அஷ்டலிங்க சன்னதிகள் மகா கும்பாபிஷேகம்

தி.மலையில் அஷ்டலிங்க சன்னதிகள் மகா கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகம்

திருவண்ணாமலையில் அஷ்டலிங்க சன்னதிகள் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகும். அடி முடி காணாத ஜோதிப் பிழம்பாக இறைவன் எழுந்தருளிய திருத்தலம் என்பதால், இங்கு அமைந்துள்ள மலையை இறைவன் திருவடிவாக வணங்கப்படுகிறது.மேலும், தீபமலையை சுற்றிலும் 14 கிலோ மீட்டர் தூரமுள்ள கிரிவலப்பாதையில், இந்திரன் முதலானோர் வணங்கி வழிபட்ட அஷ்டலிங்க சன்னதிகள் அமைந்துள்ளன. 8 திசைகளிலும் அமைந்துள்ள அஷ்டலிங்கங்களை பக்தர்கள் தரிசனம் செய்தபடி கிரிவலம் செல்கின்றனர்.மேலும், பிற்காலத்தில் உருவான சூரியலிங்க சன்னதி, சந்திரலிங்க சன்னதிகளும் வழிபாட்டுக்கு உரியதாகும்.இந்நிலையில், கிரிவ லப்பாதையில் அமைந் துள்ள அஷ்டலிங்க சன்னதிகளுக்கு மகா கும்பாபிஷேம் நடத்த இந்து சமய அறநிலையத்துறை கடந்த ஆண்டு அறிவித்தது.அதன்படி, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருப்பணிகள் தொடங்கி, கடந்த ஒரு ஆண்டாக நடந்தது.அஷ்டலிங்க சன்னதிகளில் நேற்று காலை கணபதிபூஜையுடன் மகா கும்பாபிஷேக விழா தொடங்கியது. பின்னர், நேற்று மாலை முதல் கால பூஜையும், தீபாராதனையும் நடந்தது. இதனைத் தொடர்ந்து இன்று காலை 6 மணியளவில் 2-ம் கால பூஜையும், 8 மணி அளவில் மூலவர் அஷ்டலிங்கங்கள் மற்றும் சூரிய லிங்கம், சந்திரலிங்கம் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர், அஷ்டலிங்க சன்னதிகளான இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம, நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயுலிங்கம், குபரே லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம் சன்னதிகளுக்கும் காலை 10 மணியளவில் மகா கும்பாபிஷேகம் அதிவிமரிசையாக நடந்தது. பக்தர்கள் அரோகரா கோஷம் விண்ணதிர கலசங்கள் மீது புனிதநீர் ஊற்றப்பட்டது.மகா கும்பாபிஷே ஏற்பாடுகளை அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தன.

Tags

Next Story