தேய்பிறை அஷ்டமி; பைரவருக்கு சிறப்பு வழிபாடு

தேய்பிறை அஷ்டமி; பைரவருக்கு சிறப்பு வழிபாடு

 சிவகங்கை பெரியநாயகி அம்மன் சமேத் சிவர்னேஸ்வரர் கோவிலில் மாசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

சிவகங்கை பெரியநாயகி அம்மன் சமேத் சிவர்னேஸ்வரர் கோவிலில் மாசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகர் மையப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் சமேத ஶ்ரீ சசிவர்னேஸ்வரர் திருக்கோவிலில் மாசி மாத தேய்பிறை அஷ்டமி திருநாளை முன்னிட்டு நின்ற நிலையில் கோவிலில் காவல் தெய்வமாக அருள் பாலிக்கும் பைரவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை நடைபெற்றது.

அனைத்து சிவாலயங்களிலும் கால பைரவர் சிவ பெருமானின் ருத்திர ரூபமாக சொல்லப்படுபவர். பல்வேறு சிவன் கோவிலின் வட கிழக்குப் பகுதியில் நின்ற கோலத்தில் காட்சி தருபவர், ஆடைகள் எதுவுமில்லாமல் பன்னிரு கைகளுடன் நாகத்தை பூணூலாகவும், சந்திரனைத் தலையில் வைத்தும், சூலாயுதம், பாசக் கயிறு, அங்குசம் ஆகிய ஆயுதங்களைத் தாங்கியும் ரூபமாய்க் காட்சி தருபவர். பிரசித்தி பெற்ற பைரவர் சாமிக்கு தேய்பிறை அஷ்டமி நாளில் கோவில் அருள் பாலிக்கும் பைரவர் சுவாமிக்கு திரவிய பொடி, மஞ்சள், பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், பழங்கள், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வகையான நறுமண பொருள்கள் கொண்டு சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து வண்ண மலர்மாலைகளை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்து கோபுர தீபம், கும்ப தீபம், நாக தீபம் மற்றும் ஷோடச உபசாரங்கள் நடைப்பெற்றது. பின்னர் உதிரி புஷ்பங்களால் அர்ச்சனைகள் செய்து ஏழு முக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ பைரவர் சுவாமியை வழிபட்டனர் .

Tags

Next Story