ஆசியக்கண்ட சாதனைக்கான சிறுதானிய ஆண்டு - 2023 இணையதள மாநாடு.

ஆசியக்கண்ட சாதனைக்கான சிறுதானிய ஆண்டு - 2023 இணையதள மாநாடு.
X

திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனங்களில் ஆசியக்கண்ட சாதனைக்கான சிறுதானிய ஆண்டு - 2023 இணையதள மாநாடு.

திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனங்களில் ஆசியக்கண்ட சாதனைக்கான சிறுதானிய ஆண்டு - 2023 இணையதள மாநாடு.
சிறுதானியங்களின் பயன்பாடு மற்றும் பயன்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, டேன்மில்லட் நிறுவனம் மற்றும் கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனங்கள் இணைந்து "பன்னாட்டு சிறுதானிய இணையதள ஆசிய சாதனை மாநாடு-2023" கல்லூரி வளாகத்தில் இடைவெளியின்றி 24 மணிநேரம் நடைபெற்றது. மக்கள் சிறுதானியங்களை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலும், சர்க்கரை நோய் உள்ளிட்ட பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்கு சிறுதானியங்களின் அவசியம் குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வை கொண்டு செல்வதற்காக ஐக்கிய நாடுகள் சபை 2023-ஆம் ஆண்டை சிறுதானியங்கள் ஆண்டாக அறிவித்துள்ளது. சிறுதானிய பயன்பாட்டை அதிகரிக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனங்கள் ஆசிய சாதனை நிகழ்வை நிகழ்த்தியுள்ளது. இந்நிகழ்வின் துவக்கமாக கே.எஸ்.ரங்கசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் (தன்னாட்சி) முதல்வர் முனைவர் வே.இராதாகிருஷ்ணன் அவர்கள் சிறுதானிய மாநாடு குறித்த அறிமுகவுரை வழங்கி நிகழ்வை துவக்கி வைத்தார். கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனங்களின் முதன்மை நிர்வாக அதிகாரி முனைவர் அகிலா முத்துராமலிங்கம் அவர்கள் சிறுதானியங்களின் அவசியம் குறித்தும், அன்றாட வாழ்வில் உணவில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்பது குறித்தும் விளக்கினார். அதனைத் தொடர்ந்து சிறுதானியங்கள் குறித்த வினாடிவினா, கலந்துரையாடல், சுருக்க படவிளக்கம், பேச்சு, பாடல், நெருப்பிடாத சிறுதானிய உணவு சமைத்தல் முறைகள் போன்ற நிகழ்ச்சிகளில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். இந்நிகழ்வில் கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனங்களின் அனைத்துக் கல்லூரி முதல்வர்கள், புலமுதன்மையர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ- மாணவிகள் இணையதள வாயிலாக கலந்து கொண்டனர். இந்த உலக சாதனை நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கே.எஸ்.ரங்கசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) சிறப்பாக ஒருங்கிணைத்து அமைத்திருந்தனர்.

Tags

Next Story