பாறையினை அகற்ற வாகன ஓட்டுனர்கள் வேண்டுக்கோள்
கொடைக்கானல் பழனி பிரதான மலைச்சாலையில் நேற்று இரவு பெய்த மழையால் சாலையில் உருண்டு விழுந்துள்ள ராட்சத பாறைகளை அகற்ற கோரிக்கை வைத்துள்ளனர்.
கொடைக்கானல் பழனி பிரதான மலைச்சாலையில் நேற்று இரவு பெய்த மழையால் சாலையில் உருண்டு விழுந்துள்ள ராட்சத பாறைகளை அகற்ற கோரிக்கை வைத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நேற்று பிற்பகல் வேளை முதல் நள்ளிரவு வரை இடைவெளி விட்டு விட்டு மிதமான மழையாகவும்,கன மழையாகவும் பெய்தது, இதனையடுத்து கொடைக்கானல் பழனி பிரதான மலைச்சாலையில் வெள்ளைப்பாறை அருகே ராட்சத பாறைகள் இன்று அதிகாலையில் உருண்டு சாலையின் குறுக்கே விழுந்துள்ளது, இதனால் இப்பகுதியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து இடையூறாக இந்த பாறை இருப்பதால் அச்சத்துடன் கடந்து வருகின்றனர், மேலும் இந்த பாறையானது அதிகாலையில் உருண்டதால் இந்த சாலையில் வாகனம் வராததாலும் அதிர்ஷ்டவசமாக பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது, மேலும் இந்த பாறையினை நெடுஞ்சாலை துறையினர் கவனம் செலுத்தி துரிதமாக அகற்ற வேண்டும் என வாகன ஓட்டுனர்கள் கோரிக்கையும் விடுத்துள்ளனர், இதே போன்று வத்தலக்கு பிரதான சாலையில் ஆங்காங்கே சாலையில் கற்கள் கிடப்பதால் இதனையும் அகற்ற வேண்டும் கோரிக்கை எழுந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. நேற்று கொடைக்கானல் நகர்ப்பகுதிகளில் 3செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Next Story