பெட்டிக்கடைகளில்  மப்டி உடையில் சோதனை நடத்திய பெண் ஏ எஸ் பி 

பெட்டிக்கடைகளில்  மப்டி உடையில் சோதனை நடத்திய பெண் ஏ எஸ் பி 
நாகர்கோவில் ஏ எஸ் பி யாங் சென் டோமா பூ டியா மப்டி உடையில் பெட்டிக்கடைகளில் சோதனை
கன்னியாகுமரி மாவட்டம்,நாகர்கோயிலில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக புகார் வந்ததை அடுத்து நாகர்கோவில் ஏஎஸ்பி மப்டியில் சோதனை மேற்கொண்டார்.

குமரி மாவட்டம் , நாகர்கோவில் மாநகரில் உள்ள சில கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், குட்கா வகைகள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகார்களின் அடிப்படையில் நேற்று நாகர்கோவில் போலீஸ் ஏ எஸ் பி யாங்சென் டோமா பூடியா திடீரென மப்டி உடையில் சென்று கடைகளில் சோதனை நடத்தினர்.

வடசேரி, பள்ளி விளை, ராமன் புதூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகள், பலசரக்கு கடைகளில் சோதனை மேற்கொண்டார். இந்த சோதனையில் சில கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்தார். ஏ எஸ்பி சோதனை அறிந்ததும் அந்த காவல் நிலையத்துக்கு உட்பட்ட இன்ஸ்பெக்டர், எஸ்ஐக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

அவர்களிடம் புகையிலை பொருட்கள், குட்கா விற்பனைகளை தடுக்க தீவிரமாக கண்காணிக்க வேண்டும், இவை எங்கிருந்து கொண்டு வரப்படுகிறது, மொத்த விற்பனையாளர்கள் யார் என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏ எஸ் பி உத்தரவிட்டார்.

Tags

Next Story