அவதூறாக பேசி தாக்கியவர் கைது
காவல் நிலையம்
சேரன்மகாதேவியில் கடைக்காரர் மற்றும் அவரது மகனை அவதூறாக பேசி தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரிடம் சேவியர் செபஸ்தியான் என்பவர், உன் கடைக்கு பின்னால் உள்ள இடத்தை என் தாய்மாமா வேலி போட்டுள்ளார், அதற்கு காரணம் நீ தான் என்று கூறி அவதூறாக பேசி கையால் தாக்கியுள்ளார். தடுக்க வந்த ஆறுமுகத்தின் மகன் சிவராமனையும் தாக்கி மிரட்டல் விடுத்துள்ளர். இதுகுறித்து ஆறுமுகம் அளித்த புகாரின் பேரில் சேரன்மகாதேவி போலீசார் சேவியர் செபஸ்தியானை நேற்று கைது செய்தனர்.
Next Story