போலி கையொப்பம் மூலம் சொத்துகள் அபகரிப்பு: தனியார் வங்கி மீது புகார்

போலி கையொப்பம் மூலம் சொத்துகள் அபகரிப்பு: தனியார் வங்கி மீது புகார்

புகார் மனுவுடன் வாலிபர்


போலியாக கையெழுத்து போட்டு கோடிக்கணக்கான சொத்துகளை அபகரித்த தனியார் வங்கி மீது நடவடிக்கை எடுக்ககோரி எஸ்.பி.அலுவலகத்தில் இளைஞர் மனு அளித்தார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் ஜவுளி ஏற்றுமதி நடத்தி வந்த கேசவபாண்டியன் என்பவர் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தார். அதில் திருச்செங்கோட்டில் ஜவுளி ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வந்ததாகவும் திருச்செங்கோட்டில் இயங்கி வரும் சிட்டி யூனியன் வங்கியில் வங்கி கணக்கு வைத்திருந்ததாகவும் கடந்த 24.12.19 ம் தேதி செக் அளித்து பணம் எடுத்ததாக குறுந்தகவல் தனது செல்போனிற்கு வந்தன. இதுகுறித்து வங்கியிடம் விசாரித்த போது செக் நம்பர் கொண்டு பணம் எடுத்ததாக தெரிவித்துள்ளனர்.

ஆனால் அசல் செக் ஆவணங்கள் தன்னிடம் இருக்கும் சூழ்நிலையில் வங்கி நிர்வாகம் எவ்வாறு எடுக்க முடியும் என கூறி வங்கி மோசடி செய்துள்ளதாக நாமக்கல் மாவட்ட குற்ற பிரிவில் புகார் அளித்தேன். இது குறித்த வழக்கு நிலுவையில் இருக்கும் சூழ்நிலையில் வங்கி நிர்வாகத்தினர் தன்னை பழிவாங்கும் நோக்கத்தில் வங்கியில் கடன் வாங்கி வைத்திருந்த மிஷின்களை திருடி விட்டதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

மேலும் கடன் பெற்றதற்கான பணத்தை இ.எம்.ஐ செலுத்திய நேரத்தில் வங்கி நிர்வாகத்திடம் பெற்ற கடன் தொகைகளுக்கு ஈடாக ஜாமீன் அளித்த தன்னுடைய கோடிக்கணக்கான சொத்துக்களை மோசடி செய்யும் நோக்கத்தில் வங்கி நிர்வாகத்தினர் தன்னுடைய கையொப்பம், தாயார்,தந்தை , சகோதரர் கையொப்பம் ஆகியவற்றை போலியாக இட்டு கடன் தொகைகளை வாரா கடன்களாக ஆக்கி என்னுடைய சொத்துக்களை போலி ஆவணங்களை தயார் செய்து அபகரித்து விட்டதாகவும், போலி கையெழுத்துயிட்டு சொத்துகளை அபகரித்த வங்கி நிர்வாகம் மற்றும் வங்கி பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.

Tags

Next Story