பேரூராட்சி பெண் துணைத்தலைவர் உட்பட 2 பேர் மீது தாக்குதல்

பேரூராட்சி பெண் துணைத்தலைவர் உட்பட 2 பேர் மீது தாக்குதல்
பெண் தலைவர் மீது தாக்குதல்
கன்னியாகுமரி மாவட்டம், புத்தளத்தில் பேரூராட்சி பெண் துணைத்தலைவர் உட்பட 2 பேர் மீது தாக்குதல் நடத்திய 25 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.

குமரி மாவட்டம், சுசீந்திரம் அருகே உள்ள புத்தளம் அரியப்பெருமாள் விளையை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மனைவி பால் தங்கம் (47) புத்தளம் பேரூராட்சி துணைத் தலைவியாகவும், திமுக மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளராகவும் உள்ளார். மேலும் ஒர்க்ஷாப் நடத்தி வருகின்றனர். இங்கு அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி நடேசன் (59)தனது இருசக்கர வாகனத்தை பழுது பார்க்க கொடுத்தார்.

வேலை முடிந்ததும் அதற்கான தொகையை ஒர்க்ஷாக் ஊழியர் அஜித்குமார் கேட்டார். இது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் சம்பவத்தன்று பால் தங்கம் மற்றும் அஜித்குமாரின் மனைவி ஜெனிபர் ஆகியோர் ஒர்க் ஷாப்பில் இருந்தபோது, நடேசன் உட்பட 25 பேர் வந்தனர். அவர்கள் வாகனம் பழுது நீக்கிய பணம் தொடர்பாக வாக்குவாதம் செய்து பால் தங்கத்தையும், ஜெனிபரையும் தாக்கினார்.

மேலும், பால் தங்கத்தின் கார் கண்ணாடியை அடித்து உடைத்து விட்டு, கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். இதில் காயமடைந்த இரண்டு பேரும் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது தொடர்பாக சுசீந்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் நடேசன் உள்ளிட்ட 25 பேரும் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட ஆறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Tags

Next Story