கல்லூரி மாணவர் மீது தாக்குதல்

கல்லூரி மாணவர் மீது தாக்குதல்
தாக்குதல் 
கல்லூரி மாணவர் மீது தாக்குதல் நடத்திய ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த செதுக்கரை பொன்னம்பட்டிரோடு பகுதியைச் சேர்ந்தவர் கபிலேஷ் (18).குடியாத்தம் அரசு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். பகுதி நேரமாக குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள பெட்ரோல் பங்க்கில் பணியாற்றி வருகிறார்.

இவர் இரவு வாகனங்களுக்கு பெட்ரோல் போட்டுக்கொண்டு இருந்தார். அப்போது குடியாத்தம் காட்பாடிரோடு பகுதியைச் சேர்ந்த சுந்தர்ராஜன் என்பவர் தன்னுடைய மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போட்ட போது, பெட்ரோல் கீழே கொட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் கபிலேஷ், சுந்தர்ராஜன் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது சுந்தரராஜனுக்கு ஆதரவாக சிலர் சேர்ந்து கொண்டு கபிலேஷை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து குடியாத்தம் டவுன் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

அதன்பேரில் டி.எஸ்பி ரவிச்சந்திரன் மேற்பார்வையில், டவுன் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி வழக்குப் பதிவு செய்து சுந்தர்ராஜ், தமிழ்வாணன், கொண்ட சமுத்திரம் அம்பேத்கர் நகரை சேர்ந்த லோகேஷ், இரணியன், அருணாசலம் நகர் பகுதியை சேர்ந்த தினேஷ்பாபு ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

Tags

Next Story