கூலித்தொழிலாளி மீது தாக்குதல் - 3 பேர் மீது வழக்கு

கூலித்தொழிலாளி மீது தாக்குதல் - 3 பேர் மீது வழக்கு

தொளசம்பட்டி காவல் நிலையம் 

தொளசம்பட்டியில் கூலி தொழிலாளியை தாக்கிய 3பேர் மீது வழக்குபதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள திண்டமங்கலம் ஊராட்சி நடுத்தெரு பகுதியில் வசிக்கும் ஐய்யணன் மகன் செல்வம், கூலி தொழிலாளி. இவருக்கும் இவரது உறவினர் கந்தசாமி என்பவருக்கும் ஏற்பட்ட மோதலில் செல்வத்தை தாக்கிய குப்பன் என்பவருடைய மகன் கந்தசாமி, கந்தசாமி மகன் தர்மன், கந்தசாமி என்பவருடைய மனைவி சகுந்தலா ஆகிய மூன்று பேர் மீது தொளசம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story