அல்லம்பட்டியில் குடிப்பதற்கு பணம் கேட்ட நபர் மீது தாக்குதல்: வழக்கு பதிவு

அல்லம்பட்டியில் குடிப்பதற்கு பணம் கேட்ட நபர் மீது தாக்குதல்: வழக்கு பதிவு
காவல் நிலையம் 
விருதுநகர் அல்லம்பட்டி பகுதியில் குடிப்பதற்கு பணம் கேட்ட நபரை தாக்கிய நபர் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர் அல்லம்பட்டி மொட்டையன் செட்டியார் தெருவை சார்ந்தவர் பாண்டியராஜா வயது 45. இவர் மனைவி இவரை விட்டு பிரிந்து சென்ற நிலையில் தனது குழந்தையுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் தனது தெரிந்த காமாட்சி என்பவரிடம் இவர் குடிப்பதற்கு பணம் கேட்டதாக கூறப்படுகிறது.

அதற்கு காமாட்சி பணம் இல்லை என கூறிவிட்டு சென்றுவிட்டதாகவும்,சிறிது நேரம் கழித்து பாண்டியராஜா வீட்டிற்கு வந்த காமாட்சி பாண்டியராஜாவை தர குறைவாக பேசி இரும்பு கம்பியால் தாக்கி ரத்தக்காயம் ஏற்படுத்தி உள்ளார்.

இது குறித்து பாண்டியராஜா அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story