பெண் மீது தாக்குதல் - கணவன் குடும்பத்தார் மீது புகார்
விருதுநகர் அருகே உள்ள சூலக்கரை பகுதியைச் சார்ந்தவர் மாரீஸ்வரி 27., இவர் கணவர் சுந்தரம். இவர்களுக்கு இரண்டு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். மாரீஸ்வரி வீட்டில் இருந்து குழந்தைகளை பார்த்து வருவதாகவும் அவருடைய கணவர் சுந்தரம் வேலைக்கு செல்வதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் லோன் எடுத்து வீடு கட்டி இருந்ததாகவும் ,அந்த கடன் தொகையை திரும்ப செலுத்த மாரீஸ்வரின் கணவர் சுந்தரம் சரிவர பணம் தராத நிலையில் குடித்து விட்டு வருவதாகவும் கூறப்படுகிறது .
இதை அடுத்து கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை வந்த நிலையில் தாய் சரோஜா மற்றும் சகோதரி மகாலட்சுமிக்கு கூறியதாகவும் சுந்தரத்தின் வீட்டிற்கு வந்த சரோஜா மகாலட்சுமி ஆகிய இருவரும் சுந்தரத்துடன் சேர்ந்து கொண்டு மாரீஸ்வரியை தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக காயமடைந்த மாரீஸ்வரி விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் அளித்த புகாரின் அடிப்படையில் சூலக்கரை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.