சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி துவக்கம்

சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி துவக்கம்

 வாக்குப்பதிவு இயந்திரங்கள் 

நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களை நான்கு சட்டமன்ற தொகுதிக்கு அனுப்பும் பணியினை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி அனைத்து கட்சி பிரமுகர்கள் முன் தொடங்கி நடைபெற்று வருகிறது
நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களை நான்கு சட்டமன்ற தொகுதிக்கு அனுப்பும் பணியினை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி அனைத்து கட்சி பிரமுகர்கள் முன் தொடங்கி நடைபெற்று வருகிறது . காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு அடுத்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு வேட்பு மனு தாக்கல் துவங்கிய நிலையில் இதுவரை யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில் காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட நான்கு சட்டமன்ற தொகுதிகளான ஆலந்தூர் ஸ்ரீபெரும்புதூர் காஞ்சிபுரம் மற்றும் உத்தரமேரூர் ஆகிய தொகுதிகளில் 1417 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டவுள்ளது. இந்த நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கும் 5572 வாக்குப்பதிவு கருவிகள் ( Ballot unit ) , 2263 வாக்கு கட்டுப்பாட்டு கருவிகள் ( Control Unit ) , 1945 இயந்திரம் யாருக்கு வாக்களித்தோம் என்பதை காட்டும் கருவி( VVPAT) உள்ளிட்டவை தேர்தல் ஆணைய கட்டுப்பாட்டு அறையில் சீலிட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குப்பதிவு மையங்களுக்கு அனுப்பும் பணி இன்று காலை 9 மணி அளவில் அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் பாதுகாப்பு அறையின் சீல் அகற்றி வாக்குப்பதிவு இயந்திரங்களை சுழற்சி முறையில் தேர்வு செய்து அனுப்பி வைக்கும் பணியினை ஆட்சியரும், காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அலுவலருமான கலைச்செல்வி துவக்கி வைத்து பார்வையிட்டு வருகிறார். இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் , பயிற்சி ஆட்சியர் சங்கீதா , மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், கோட்டாட்சியர்கள் கலைவாணி சரவணக்கண்ணன் உள்ளிட்ட வருவாய் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு வாக்குப்பதிவு இயந்திரம் எடுத்துச் செல்லும் வாகனத்திற்கு துப்பாக்கி ஏந்திய காவலர் பாதுகாப்புக்கு சென்று உரிய சட்டமன்றத் தொகுதி இருப்பு அறையில் ஒப்படைப்பார். ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் ஒவ்வொரு இடத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பு வைக்கப்பட்டு அந்த அறையும் சீலிட்டு காவல்துறை பாதுகாப்புடன் கண்காணிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Tags

Next Story