சட்டமன்ற பொதுக்குழு தலைவர் ஆய்வு

X
ஆய்வு
திண்டுக்கல்லில் சட்டமன்ற பொதுக்குழு தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் நாகல் நகரில் இஎஸ்ஐ மருத்துவமனையில் சட்டமன்ற பொதுக்குழு தலைவர் செல்வ பெருந்தகை மற்றும் 6 எம்எல்ஏக்கள் ஆய்வு செய்தனர். பின்னர் செல்வ பெருந்தகை செய்தியாளர்களிடம் பேசுகையில் :- கடந்த அதிமுக ஆட்சியில் 2016 - 17 ஆம் ஆண்டு திண்டுக்கல் இஎஸ்ஐ மருத்துவமனையில் 16 கோடிக்கு அதிகமாக மருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 16 கோடிக்கு மருந்து ஏன் கூடுதலாக வாங்கப்பட்டது என விசாரணை செய்து வருகிறோம். மருந்து வாங்கிய சம்பந்தப்பட்ட அதிகாரியின் பென்ஷன் உள்ளிட்ட பண பலன்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது. 16 கோடி மருந்து வாங்கியதற்கு கணக்கு காட்டப்படவில்லை. இது தொடர்பான முறைகேடு நடந்துள்ளதா என விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.
Tags
Next Story
