சட்டமன்ற நாயகர் – கலைஞர்” கருத்தரங்கு - அமைச்சர் பங்கேற்பு

சட்டமன்ற நாயகர் – கலைஞர் கருத்தரங்கில் அமைச்சர் மதிவேந்தன், அரசு தலைமை கொறடா செழியன் பங்கேற்பு

முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் தொடர்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் மாநிலம் முழுவதும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிகழ்ச்சிகளை நடத்துவதெற்கென தமிழ்நாடு அரசால் 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அக்குழுக்களில் ஒன்றான 'சட்டமன்ற நாயகர்-கலைஞர்' என்ற குழு தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு தலைமையில் முன்னாள் பேரவைத் தலைவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் / நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்களை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டு, தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ”நூற்றாண்டு விழா நாயகர் கலைஞர் சட்டமன்றத்தின் மூலம் சமூக முன்னேற்றத்திற்கு ஆற்றிய சாதனைகளில் மாணவர்களை ஈர்த்தது" என்ற தலைப்பின் கீழ் இரண்டு நாள் கருத்தரங்கு நடத்தப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் நாமக்கல் மாவட்டத்தில் வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம், இரா.புதுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, ரெட்டிப்பட்டி பாரதி மேல்நிலைப்பள்ளி மற்றும் நாமக்கல் அரசினர் மேல்நிலைப்பள்ளி (தெற்கு) ஆகிய பள்ளிகளில் நேற்று (06.12.2023) கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ”சட்டமன்ற நாயகர் – கலைஞர்” விழாக்குழுவின் சார்பில் கருத்தரங்கம் வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன், அரசு தலைமை கொறடா முனைவர் கோவி. செழியன் ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா ஆகியோர் தலைமை தாங்கினா். சட்டமன்ற உறுப்பினர்கள் பெ.இராமலிங்கம் (நாமக்கல்), கு.பொன்னுசாமி (சேந்தமங்கலம்) ஆகியோர் முன்னிலை வகித்தனா்.

மேலும், ”சட்டமன்ற நாயகர் – கலைஞர்” விழாக்குழு கருத்தரங்கில் சிறப்பாக உரையாற்றி முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும், 4 மற்றும் 5-ஆம் இடம் பிடித்த மாணவ, மாணவியர்களுக்கு ஆறுதல் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன், அரசு தலைமை கொறடா முனைவர் கோவி. செழியன் ஆகியோர் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் சட்டமன்றப் பேரவை கூடுதல் செயலாளர் ந.இரவிசந்திரன், நாமக்கல் நகர் மன்ற தலைவர் து.கலாநிதி, துணை தலைவர் செ.பூபதி, வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் ஆர்.எம்.துரைசாமி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஏ.ஆர். துரைசாமி, சட்டமன்றப் பேரவை துணைச் செயலாளர் கே.ரமேஷ், நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் மா.க.சரவணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ப.மகேஸ்வரி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள், ஆசிரிய பெருமக்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story