பேரவை கூட்டம்

பேரவை கூட்டம்

நாகை மாவட்டம் திருமருகலில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் ஒன்றிய கிளை பேரவை கூட்டம் நடைபெற்றது.


நாகை மாவட்டம் திருமருகலில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் ஒன்றிய கிளை பேரவை கூட்டம் நடைபெற்றது.

நாகை மாவட்டம்திருமருகலில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் ஒன்றிய கிளை பேரவை கூட்டம் நாகை மாவட்டம் திருமருகலில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் ஒன்றிய கிளை பேரவை கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றிய தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார்.ஒன்றிய துணை தலைவர் சுப்பிரமணியன், ஒன்றிய இணை செயலாளர் ஜெகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநில துணைத்தலைவர் மதிவாணன், மாவட்ட தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் ஜெயராஜ்,மாவட்ட பொருளாளர் போஜன் ஆகியோர் கலந்து கொண்டு கூட்டத்தில் பேசினார். முன்னதாக முன்னாள் மாவட்ட துணை தலைவர் சந்திரசேகரன் வரவேற்றார்.

இதில் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.6 ஆயிரத்து 750 வழங்க வேண்டும்,அகவிலைப்படி, மருத்துவ காப்பீடு திட்டம் வழங்க வேண்டும்,சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு ஈமச்சடங்கு நிதி அமல்படுத்த வேண்டும்,திருமருகலை தனி தாலுக்காவாக அறிவிக்க வேண்டும்,திருமருகலில் உள்ள நூலகத்திற்கு அரசு கட்டிடம் அமைத்து அதில் நூலகம் இயங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.இதில் ஒன்றிய செயலாளர் ரங்கநாதன், ஒன்றிய பொருளாளர் குணசேகரன் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.முடிவில் ஒன்றிய பொறுப்பாளர் ஜெயலெட்சுமி நன்றி கூறினார்.

Tags

Next Story