சட்டமன்ற உறுதிமொழி குழு வருகை- அனைத்து துறை அலுவலர் ஆலோசனைக் கூட்டம்
ஆலோசனை கூட்டம்
சேலம் மாவட்டத்துக்கு சட்டப்பேரவை அரசு உறுதிமொழிக்குழு நாளை வரவுள்ளது. எனவே, அரசு அலுவலர்கள் தங்கள் துறை தொடர்பான விவரங்களை தயாராக வைத்திருக்க வேண்டும், என ஆட்சியர் கார்மேகம் அறிவுறுத்தினார்.
தமிழக சட்டப்பேரவையின் அரசு உறுதிமொழிக் குழுவானது, அரசு உறுதிமொழி நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்டங்களிலும் நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறது. அதன்படி, 2023-2024-ம் ஆண்டுக்கான சட்டப் பேரவையின் அரசு உறுதிமொழிக்குழு, சேலம் மாவட்டத்தில் நாளை (30-ம் தேதி) ஆய்வு மேற்கொள்ள உள்ளது. குழுவின் தலைவர் எம்எல்ஏ வேல்முருகன் தலைமையில், சட்டப் பேரவை செயலாளர் சீனிவாசன் மற்றும் குழு உறுப்பினர்களான எம்எல்ஏக்கள் அண்ணாதுரை, அருள், கருணாநிதி, சக்ரபாணி, பழனியாண்டி, மணி, ரூபி ஆர். மனோகரன், மோகன், ராமலிங்கம், வில்வநாதன், ஜெயக்குமார், சட்டப்பேரவை இணைச் செயலாளர் கருணாநிதி, துணைச் செயலாளர் ரவி ஆகியோர் சேலம் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். அவர்கள் வரவுள்ளதை முன்னிட்டு, அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஆட்சியர் கார்மேகம் தலைமை வகித்தார். இதில், அரசு அலுவலர்கள் தங்கள் துறை தொடர்பான முழுமையான விவரங்களை குழுவுக்கு வழங்க ஏதுவாக தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்’ என ஆட்சியர் அறிவுறுத்தினார்.
Tags
Next Story