சட்டப்பேரவை கூடுதல் நாட்கள் நடத்த வேண்டும்: அதிமுக கொறடா வேலுமணி
எஸ்.பி வேலுமணி
தமிழ்நாடு சட்டப்பேரவை வருகின்ற 20 ஆம் தேதி கூடவுள்ள நிலையில் துறை ரீதியான மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்களை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு சட்டமன்ற கட்சி தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் அலுவல் ஆய்வு கூட்டத்தில் ஆலோசனை நடத்தினார்.
அதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக கொறடா எஸ் பி வேலுமணி, சட்டப்பேரவை மொத்தமாக ஒன்பது நாட்கள் தான் நடத்த இருக்கிறார்கள் தேர்தல் வாக்குறுதிகளில் 100 நாட்கள் சட்டமன்றம் நடத்த வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள் எப்பொழுதுமே 40லிருந்து 50 நாள் நடக்கும் ஆனால் இவர்கள் மிகக் குறைவாகவே நடத்தி இருக்கிறார்கள் இதற்கு நாங்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கிறோம்,
இடைத்தேர்தலை காரணம் காண்பிக்கிறார்கள்,இடைத்தேர்தல் முடிந்தவுடன் தொடர்ந்து நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கூறியது.
போல் இவர்களை நேரடி ஒளிபரப்பு செய்யாமல் குறிப்பிட்ட காட்சி மட்டும் ஒளிபரப்பு செய்கிறார்கள், ஆகவே இனி வரும் காலங்களில் 100 நாட்கள் சட்டப்பேரவை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம் என்றார்.