திருப்பத்தூர் ஆட்சியரகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி
நலத்திட்ட உதவிகள் வழங்கல்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு செல்போன்கள், தையல் இயந்திரங்கள் வழங்கிய கலெக்டர்.. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் மாவட்ட கலெக்டர் தர்ப்பகராஜ் கலந்து கொண்டு 47 மாற்றுத்திறனாளிகளுக்கு செல்போன்கள் மற்றும் 25 மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள் மற்றும் தேசிய அடையாள அட்டைகள் என மொத்தம் 72 மாற்றுத்திறனாளிகளுக்கு 7 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, திருப்பத்தூர் சப் கலெக்டர் பானு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன், முடக்கியில் நிபுணர் இனியன் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்..