மூத்த குடிமக்களுக்கான உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டம்
கோப்பு படம்
மத்திய அரசின் சமூக நீதித்துறை சார்பில் திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதியில் உள்ள மூத்த குடிமக்களுக்கு உதவிகள் வழங்கும் திட்டத்திற்கான ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மூத்த குடிமக்கள் பயன்பெறுவார்கள்.
நாடு முழுவதும் 3 தொகுதிகள் தேர்வு செய்யப்பட்டு உதவிகள் வழங்கப்பட உள்ளது. அதில் ஒரு தொகுதியாக திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதி தேர்வு செய்யப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் இந்த உதவிகளை பெறும் 2-வது தொகுதியாக திருவண்ணாமலை உள்ளது.
முதல்மைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டில் உள்ள மாற்றுத்திறனாளிகள், பெண்கள், முதியவர்கள் பயன்பெறும் வகையில் திட்டங்களை மத்திய அரசிடம் இருந்து போராடி பெற்றுத்தர வேண்டும் என பாராளுமன்ற உறுப்பி னர்களுக்கு உத்தர விட்டுள்ளார்.பொதுப்ப ணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வழிகாட்டுதலின் படி திருவ ண்ணாமலை பாராளுமன்ற தொகுதியில் பல்வேறு பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக மூத்த குடிமக்களுக்கான உதவி திட்டம் திருவண்ணாமலை தொகுதியில் செயல்படுத்த ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறும் மூத்த குடிமக்களை தேர்வு செய்வதற்காக சிறப்பு முகாம்கள் மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் நடத்தப்படும்.கடந்த ஆண்டு திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதியில் மாற்றுத் திறனாளி களுக்கான உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டம் செயல்படு த்தப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் தென்னிந்தியாவில் அதிக பயனாளிகள் பயன் அடைந்த தொகுதியாக திருவண்ணாமலை தொகுதி உள்ளது என சி.என்.அண்ணாதுரை எம்பி தெரிவித்தார்.
திருவண்ணாமலை தொகுதி எம்.பி. அண்ணாதுரையின் முயற்சியினால் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் திருவண்ணாமலை ரெயில் நிலையத்தில் நின்று செல்கிறது. இதன் மூலம் திருவண்ணாமலைக்கு வரும் ஆன்மீக பக்தர்கள் பெரிதும் பயன் பெறுகின்றனர்.