ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம்
ஆலோசனை கூட்டம்
உள்ளாட்சிகளை கலைத்தால் நீதிமன்றத்தை நாடுவோம் என ஊராட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, கூட்டமைப்பு தலைவர் பரமசிவம் தலைமை தாங்கினார். மஞ்சபுத்துார் ஊராட்சி தலைவர் கோவிந்தராஜ் வரவேற்றார். கூட்டத்தில், 5 ஆண்டுகள் முடியாத நிலையில் இருக்கும் ஊராட்சிகளை கலைக்கக் கூடாது. ஊராட்சிகளைக் கலைத்தால் நீதிமன்றத்தை நாடுவது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் 44 ஊராட்சி தலைவர்கள் பங்கேற்றனர். தியாகராஜபுரம் தலைவர் சங்கரன் நன்றி கூறினார்.
Next Story