முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மகளிருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
இராசிபுரம் - வநேத்ரா முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி(தன்னாட்சி)யில் மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு மன்றம் சார்பாக மகளிருக்கான உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியானது அண்மையில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திருமதி ஜோதிலட்சுமி சுந்தரேசன் அவர்கள், பெண்களுக்கான கல்வி உரிமை, சொத்துரிமை, பெண்களுக்கான பாதுகாப்பு, திருமண உரிமை, பணிக்குச் செல்லும் பெண்களுக்கு மகப்பேறு காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு, தொழில் நிறுவனங்களில் ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் ஊதியம், தொழில் நிறுவனங்களில் பெண்களுக்கு பாதுகாப்பாக வேலை செய்யும் சூழல், ஆண்கள் பெண்களுக்கு இழைக்கும் பாலியல் தொல்லைகளுக்கு சட்டத்தின் மூலம் அளிக்கப்படும் தண்டனைகள் போன்றவற்றைப் பற்றி அனுபவப்பூர்வமாக நடந்த நிகழ்வுகளைக் கொண்டுவிளக்கிக் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ்.பி. விஜயகுமார், துணைமுதல்வர் முனைவர் ஆ.ஸ்டெல்லாபேபி, சமுதாய செயல்பாடுகளின் புலமுதன்மையர் முனைவர் எம். ராமமூர்த்தி, மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புமன்ற ஒருங்கிணைப்பாளர் திருமதி. ரா. மாலதி, அனைத்துதுறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்களோடு பெரும்பாலான மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.