ஓமலூரில் கொப்பரை தேங்காய் ரூ.5 லட்சத்துக்கு ஏலம்
தேங்காய் பருப்பு ஏலம்
ஓமலூர் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடந்த ஏலத்தில் ரூ.5.20 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு விற்பனையானது.
சேலம் மாவட்டம் ஓமலூர் இந்திரா நகர் பகுதியில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கொப்பரை தேங்காய் பருப்பு ஏலம் நேற்று நடைபெற்றது. ஏலத்தில், 21 விவசாயிகள் 157 மூட்டை தேங்காய் பருப்புகளை கொண்டு வந்தனர். இதில் வியாபாரிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்புகளை ஏலம் எடுத்தனர். அதிகபட்ச விலையாக 95 ரூபாய் 69 காசுக்கும், குறைந்தபட்ச விலையாக 60 ரூபாய் 39 காசுக்கும், சராசரி விலையாக 70 ரூபாய் 8 காசுக்கும் ஏலம் போனது. நேற்று மட்டும் ரூ.5 லட்சத்து 20 ஆயிரத்து 670-க்கு கொப்பரை தேங்காய் ஏலம் போனதாக வேளாண் விற்பனை கூட கண்காணிப்பாளர் ஆனந்தி தெரிவித்தார்.
Next Story